வானில் காகளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம் - 2
இப்புவித் துன்பங்கள்
மறைந்திடுமே
இயேசுவின் இராஜ்ஜியம்
நெருங்கிடுதே - 2
ஆ ஆமென் அல்லேலூயா
ஆமென் வாரும் இயேசுவே - 2
2. கன்மலை வெடிப்பினில்
உத்தமியாய்
கறைகள் திரைகள் அகற்றிடுவோம் - 2
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்
- 2 - ஆ ஆமென்
3. மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி - 2
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் - 2 - ஆ ஆமென்
4. பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதைகள் ஏற்றதினால்
- 2
தியாகத்தின்
மேன்மையைக் காத்துக் கொண்டார்
அவர் போல் மாறியே பறந்திடுவார் - 2 - ஆ
ஆமென்
5. மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தம் கேட்டிடுதே - 2
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் - 2 - ஆ
ஆமென்
- Rev. Prabhudas Vasu
YouTube Link
No comments:
Post a Comment