05 January 2026

வானமும் பூமியும் படைத்தவராம்

வானமும் பூமியும் படைத்தவராம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வானமும் பூமியும் படைத்தவராம்

                        கடவுள் ஒருவர் இருக்கின்றார்;

                        தந்தை சுதன் தூய ஆவியுமாய்

                        நம்மில் உறவுடன் வாழ்கின்றார்!

 

1.         பரிசுத்த ஆவியின் வல்லமையால்

            திருமகன் மரியிடம் மனுவானார்;

            மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே

            புனிதராம் கடவுள் மனிதரானார்!

 

2.         பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,

            கல்லறை ஒன்றில் அடக்கப்பட்டார்;

            மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்,

            மரணத்தின் மீது வெற்றி கொண்டார்!

 

3.         பரலோகம் வாழும் தந்தையிடம்

            அரியணை கொண்டு இருக்கின்றார்;

            உலகம் முடியும் காலத்திலே

            நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்

 

4.         பரிசுத்த ஆவியை நம்புகிறோம்,

            பாரினில் அவர் துணை வேண்டுகிறாம்;

            பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

            பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்!

 

5.         திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்;

            புனிதர்கள் உறவை நம்புகிறோம்;

            சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை

            விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அனுப்பும் தேவா உம் ஆசியோடு

பாடல் Youtube Link   Text file Download       அனுப்பும் தேவா உம் ஆசியோடு ஆசியோடு அகிலம் எங்கும் உம் பெ...