வானத்தில்
மின்னும் நட்சத்திரங்கள்
வானபரனை
வாழ்த்திப் பாடும்
பூமியின் சிருஷ்டிகள் புகழ் பாடுவோம்
காற்றும் மழையும் கவிபாடும்
நமது உள்ளம் துதி பாடட்டும்
1. காடுகளே மேடுகளே தேவனை துதியுங்கள்
கைவிடாமல் காக்கும்
நமது கர்த்தரை துதியுங்கள்
வாலிபர் கன்னியர் பிள்ளைகள் யாவரும்
வாழ்த்திப் பாடுங்கள்
வல்லவர் இயேசு நம் சொந்தமானார்
அவரில் மகிழுங்கள்
2. அக்கினியே கல்மழையே
உறைந்த பெருமழையே
மூடுபனியே வாடைக்
காற்றே
அவரைத் துதியுங்கள்
இயேசுவின் நாமம் உயர்ந்ததென்று
வாழ்த்திப் பாடுங்கள்
இயேசு வல்லாமல்
மீட்பில்லையென்று
உலகுக்கு சொல்லுங்கள்
3. ஆழ்கடலே சமுத்திரமே
தேவனை துதியுங்கள்
அன்பினாலே உலகில் பிறந்த
கர்த்தரை துதியுங்கள்
தம்முடன் நம்மை ஒன்றாய் இணைக்க
அழைத்தோரை துதியுங்கள்
சிலுவையில் நமக்காய்
மரித்துயிர்த்தெழுந்த
இயேசுவை துதியுங்கள்
No comments:
Post a Comment