06 January 2026

வானாதி தாள் காட்டும் நல்ல

வானாதி தாள் காட்டும் நல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

145. இராகம்: இந்துஸ்தானி.

 

                             பல்லவி

 

                   வானாதி தாள்[1] காட்டும் - நல்ல

                        வாத்தி[2] சுவிசேடம்.

 

                             அனுபல்லவி

 

            கோன் ஆதி இயேசு கிறிஸ்து மொழிந்த தோர்

            கோதில்லா[3] நீதி நிறைந்த சுவிசேஷம். - வானாதி

 

                             சரணங்கள்

 

1.         ஆதி ஒளி தோண, நல்ல அறிவு மிகக் காண-சத்திய

            நீதியின் வேர் ஊண,-அதை-நீணிலத்தோர் பூண

            ஜாதிகளான சகல மனிதரும்

            சத்ய மறை என்று துத்யம்[4] புரியவும் - வானாதி

 

2.         அன்பு நிறைந்திடவும்,-கெட்ட-ஆசை குறைந்திடவும்-மோட்ச

            இன்பம் சிறந்திடவும்,-பாவ-இருள்கள் மறைந்திடவும்,

            முன்பு நடந்த முரட்டாட்டத்தை விட்டு

            முற்றிலும் நற்குண சுத்தம் பெருகவும் - வானாதி

 

3.         கார்இருள் நீங்கிடவும்-பாவக் கயிறுபின் வாங்கிடவும்-நித்ய

            பேர்ஒளி ஓங்கிடவும்-சத்ய-பிரபல்யம் நூங்கிடவும்[5]

            தாரணியில் உள்ள சர்வ மனிதரும்

            சத்ய பிதா எனும் வஸ்துவைச் சேரவும் - வானாதி

 

4.         பாலர்கள் கூடிடவும்-நித்ய-பரகதி தேடிடவும்-சீவ

            காலங்கள் நீடிடவும், மோட்ச-கன முடி சூடிடவுங்

            கோலம் நிறைந்த மணவாளன் இயேசுவைக்

            கூடி அனுதினம் பாடித் துதிக்கவும் - வானாதி

 

 

- மரியான் உபதேசியார், திருநெல்வேலி.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பாதம்

[2] வழிகாட்டி

[3] குற்றம்

[4] துதி

[5] பெருகிடவும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...