வானம் வெண்கலமாய் ஆவதேன்
பூமியும் இரும்பாய்
ஆவதேன் - 2
கற்பனைகள் பத்து கற்பனைகள்
கடைப்பிடிக்காதே
போவதால் - 2
1. அடிமைத்தன வீடாம்
எகிப்தை விட்டு
அழைத்துச் சென்றவர் தேவன் அல்லவா - 2
அந்த தேவனை உந்தன் சொந்த தேவனாய்
ஆராதித்தால்
ஆசி மழை பெய்யுமே - 2 - வானம்
2. முற்றும் உயர்குலத் திராட்சையாக
இயேசு தேவன் உன்னை நாட்டினாரே - 2
நீயோ அவருக்கு காட்டு திராட்சையின்
ஆகாத கொடியாய்
மாறியதென்ன? - 2 - வானம்
3. இயேசுவை விட்டு தூரப்பட்டு
மாயைப் பின்பற்றி
அலைவதற்கு - 2
வழிபோக்கன்
போலவும் பரதேசி போலவும்
உன் வாழ்வில் இயேசு இருப்பாரே - 2 - வானம்
- Bro A. Thomas
No comments:
Post a Comment