03 January 2026

வானங்களில் உயர்ந்தவராம்

வானங்களில் உயர்ந்தவராம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானங்களில் உயர்ந்தவராம்

          நம் வல்ல தேவன் இயேசுவைத் துதியுங்கள்

 

                        கைத்தாள ஓசை எழுப்பி

                        கர்த்தர் அவரது நாமத்தை புகழுங்கள்

 

1.         வான தூதர் சேனைகளே

            கர்த்தரை துதியுங்கள்

            சூரிய சந்திர நட்சத்திரங்களே

            அவரைத் துதியுங்கள்

            என்றும் நம்மை ஆள்பவராம்

            நம் இயேசுவைத் துதியுங்கள்

 

2.         ன்மலையே அக்கினியே

            கர்த்தரை துதியுங்கள்

            உறைந்த மழையே மூடுபனியே

            அவரைத் துதியுங்கள்

            இயேசுவின் நாமம் என்றும் உயர்ந்தது

            என்றே துதியுங்கள்

 

3.         பூமியின் சகல ஜாதிகளே

            கர்த்தரைத் துதியுங்கள்

            வாலிபர் கன்னிகை பிள்ளைகளே

            அவரைத் துதியுங்கள்

            இயேசுவே என்றும் எங்கள் தெய்வம்

            என்றே துதியுங்கள்

 

4.         நடனத்தோடு இயேசுவின் நாமம்

            போற்றிப் பாடுங்கள்

            கின்னர ஓசை கீதம் எழுப்பி

            கீர்த்தனம் பண்ணுங்கள்

            வருக உமது ராஜ்ஜியம் என்றே

            வாழ்த்திப் பாடுங்கள்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...