03 January 2026

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

            மண்ணுலகே, புகழ்ந்து துதி பாடு - 2

 

                        சர்வ வல்லவர் நம் ஜனத்திற்கு

                        ஆறுதல் தருகிறார்

                        சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது

                        இரக்கம் காட்டுகிறார் - வானங்களே

 

1.         கைவிட்டாரே மறந்தாரே

            என்று நீ சொல்வானேன் - 2

 

            பால் குடிக்கும் பாலகனை

            தாய் மறப்பாளோ? மறந்து போவாளோ?

            கற்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?

            இரங்காதிருப்பாளோ?

            தாய் மறந்தாலும் தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்

            உள்ளங்கையிலே அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் - வானங்களே

 

2.         கண்களை நீ ஏறெடுத்துப் பார்

            சுற்றிலும் பார் மகளே (மகனே) - 2

 

            உன்னைப் பாழாக்கினவர்கள் புறப்பட்டுப் போகிறார்கள்

            தூரமாய்ப் போகிறார்கள்

            பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது

            பாடி மகிழ்கின்றது

            பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே

            அணிகலன் போல் நம் தேசத்தை சபை நீ அணிந்து கொள்வாய் - வானங்களே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...