வானமீதில் ஏறிப் போன இயேசுவானவர்
வருகை நாளில் திரும்பி வருவார் தூதர்களுடன்
- 2
ஆர்ப்பரிப்பின் சத்தமும் எங்கும் கேட்குமே
ஆரவார எக்காளம் வானில் முழங்குமே - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா - 2
1. பரிசுத்தத்தை காத்துக் கொண்ட பக்தர் யாவரும்
பறந்து செல்லும் பரவச நாள் நெருங்கி வருகுதே
- 2
பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள்
- (2)
பரமன் பாதம் பாடல் பாடி என்றும் மகிழ்வார்கள்
- வானமீதில்
2. மாம்சம் இரத்தம் லோக ஆசை அழிந்து போகுமே
பாவ சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே
- 2
இமைப் பொழுதிலே மறுரூபம் பெறுவோமே - (2)
மன்னன் இயேசு அழைத்து செல்வார் மா சந்தோஷமே - வானமீதில்
3. இராஜ்ஜியத்தின்
சுவிசேஷம் எங்கும் தொனிக்குதே
சாட்சி கூறி செய்தி சொல்ல தருணம் தந்தாரே
- 2
ஆத்துமாக்களை சேகரிப்போமே
- (2)
ஆண்டவரின் வருகை நாளில் ஆனந்திப்போமே -
வானமீதில்
No comments:
Post a Comment