02 January 2026

வாழ்வுக்கு செல்லும் வழியை இறைவா

வாழ்வுக்கு செல்லும் வழியை இறைவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        வாழ்வுக்கு செல்லும் வழியை இறைவா

                   எனக்குக் காட்டும் ஐயா

                        வாழ்வும் நீயே வழியும் நீயே

                        வாழ்வு அளிப்பவர் நீயே

 

1.         உம்மைப் பிரிந்து ஊதாரியாய்

            உலகினில் வாழ்ந்த நாட்கள் எல்லாம்

            அமைதி இழந்தேன் வாழ்விழந்தேன்

            எல்லாம் இழந்து விட்டேன்

            மன்னியும் தேவா மனமிரங்கும்

            அப்பா என்னை ஏற்றுக் கொள்ளும்

 

2.         திக்கற்ற பிள்ளைகளின் தந்தையும் நீரே

            அனாதை மக்களின் ஆதரவே

            தனிமை என்னை வாட்டுவதால்

            மடிந்து போகின்றேன்

            பெலப்படுத்தும் உம் ஆவியினால்

            அப்பா எனக்கு வாழ்வு தாரும்

 

3.         கர்த்தர் தாமே என் உரிமை சொத்து

            எப்போதும் கண்முன்னே நிறுத்துகிறேன்

            இதயம் மகிழும் உள்ளம் மகிழும்

            உடலும் இளைப்பாறும்

            காப்பாற்றும் தேவா பாதுகாப்பீர்

            அப்பா என்னை வழி நடத்தும்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...