159. இராகம்: பைரவி அடதாளசாப்பு
பல்லவி
வான
இராச்சியம் வந்ததோ கோ கோ!
மாந்தரே;
தவம் செய்யும்; ஓகோ கோ!
அனுபல்லவி
ஆன சாட்சி, தியான சூட்சி[1], மெய்ஞ்
ஞான காட்சியர்,
தோன்றினார்; - வான
சரணங்கள்
1. மன்னவன் கிறிஸ்தாதிபன்
வந்தார்,
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே;
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை
மேவினார்; உயர் உன்னதக் கிருபை ஆழமே! - வான
2. பிந்தி வந்தவர், முந்தி இருந்தவர்;
பேசரும் பொருளார், பரம்பர[2] நேசர்,
நம் கருணாம்பரர்,[3]
சுந்தரப் பரிபூரணர், காரணர்,
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம்மாதிரந்தனில்[4] மேவினார் - வான
3. அண்ணலார் பாத ரட்கையின் வாரையே
அவிழ்க்க, வாய்மையில்[5] எடுக்க,
அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்;
திண்ணம் என் முழுக்கோ
ஜலத்தீர்த்தமே;
தீயினாலும்
அரூபியாலும்[6] ஸ்நானமே அவர் ஈகுவார். - வான
4. வேதமார் பரிசேயர்
சதுசேயரே,
வீம்புத் துட்டமுறு தீம்புக்கெட்டகுண பாம்புக்குட்டிவிரியன்களே
போதவே வரும்
கோபத்துக்குத் தப்பிப்
போவதைத் திடமாய் உமக்கிது
போதிவித்[7] தெவர் காட்டினார்? - வான
5. மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது,
பத்திரத்துடன் எச்சரிக்க விடாதேயும்,
வரத்தில் நற்கனி
தான் தருகாத்[8] தரு
வைத்திடக் கிட
வெட்டி மிக்கழல் அக்கினிக் கிரையாக்குவார்
- வான
6. தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது
துறையினில்
தமதுரிய நற்களம் அற விளக்கி,
அறுதியிலே
தோற்றக் கோதுமை
கேயத்தில்[9] சேர்த்துமே
தீயதுர்ப்பதர்
ஆனதைத் தழலால் எரிப்பர் இந் நேரமே - வான
- வேதநாயகம்
சாஸ்திரியார்
No comments:
Post a Comment