வாழ்விது என மகிழும்
மரணங்களில் - மெய்
வாழ்வெது! நித்திய
வாழ்வும்
எது?
வாய்த்தத் தலைவர்களின்
ஏய்ப்பினிலே - மெய்
மேய்ப்பனாய்
திகழும்
மேன்மை
அது
1. புரிந்திடா கூச்சலின்
வெறுமையிலே - ஞானம்
புகன்றிடும் புண்ணிய
வார்த்தை
அது
அறிஞர்
தம் கூட்டத்தின்
மடமையிலே - மெய்
அறிவதாய் திகழும்
ஞானம்
அது!
2. ஒளிகளில் கரந்திடும்
இருளினிலே - மெய்
வழியினை காட்டிடும்
ஒளி
தான் அது
உணவு
பதுக்கல்களின்
பசியினிலே - மெய்
உயிர்
தரும் வானக
உணவு
அது
No comments:
Post a Comment