02 January 2026

ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து வந்த

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து வந்த

            அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்

            அற்புதமாய் அதிசயமாய் வழி நடத்தி வந்த

            அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன் - 2

 

                        நடத்தி வந்தீரே நடத்தி வந்தீரே

                        நன்றி சொல்லி துதிக்கிறேனையா

                        சுமந்து கொண்டீரே தோளில் சுமந்து கொண்டீரே

                        உள்ளம் உணர்ந்து துதிக்கிறேனையா - (2)

 

1.         தடைகள் வந்த போதெல்லாம்

            தடைகள் நீக்கும் தெய்வமாய்

            எனக்கு முன்னே சென்றவர் நீரே

            தாங்க முடியாத பலவீனம்

            தாக்க எதிர்த்து வந்த போது

            தாங்கிக் கொண்ட தெய்வம் நீரே - 2 - நடத்தி

 

2.         தனித்து நின்ற போதெல்லாம்

            தவித்து நின்ற போதெல்லாம்

            தகப்பனாக தேடி வந்தீரே

            வெறுமையாய் போகாமலும்

            வெட்கப்பட்டு போகாமலும்

            வெற்றிச்சிறந்து வாழவைத்தீரே - 2 - நடத்தி

 

3.         வாக்கு தந்த தெய்வமாய்

            வாக்கு மாறா நேசராய்

            வழிகள் எல்லாம் கூட வந்தீரே

            வல்ல செயல்கள் கண்டதால்

            நல்ல கிருபை பெற்றதால்

            நன்றியோடு துதிகள் செலுத்துவேன் - 2 - நடத்தி

 

                        காலமெல்லாம் என்னை கரம் பிடித்து நடத்தும்

                        அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்

                        அற்புதமாய் அதிசயமாய் வழி நடத்தி வந்த

                        அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன் - 2

 

 

- Pas. Stephan Arul Raj

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...