14 January 2026

வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன்

வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன்

                   என்று வானம் பூமி தந்த தேவன் வாக்களித்தாரே

                        வீணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்

                        உண்மையோடு தேவனை துதித்து பாடுவோம்

 

1.         வேர் துளிர்க்கும் இளந் தளிர் போலே

            தேவ ஜனம் நாமும் எழும்பிடுவோம்

            வேர்கள் ஆழம் செல்ல மேலே வளர்ந்து நாமும்

            கனி கொடுக்கும் மரங்கள் போலவே

            அணி அணியாய் தேவ சேனை பெருகி

            தேச மெங்கிலும் பணிபுரியும்

            தேவ ராஜ்ஜியம் விரைந்து பெருகிடும்

 

2.         கோலியாத்தை போல்

            எதிரிகள் சூழ்ந்து வந்து நின்று

            நிந்தைகள் செய்த போதிலும்

            ஆமானைப் போல் சதிகள் செய்து

            ஊழியத்தை வேறறுக்க முனைந்த போதிலும்

            பதிலளிக்கும் தேவன் முன்னே

            முழந்தாலிட்டு வேண்டுவோம்

            எதிரிகளும் ஆண்டவரை

            பணிவோர் காணுவோம்

 

3.         திறந்த வாசல் இன்று உண்டு

            தேவையுள்ள ஆத்துமாக்களை எங்கிலும் உண்டு

            திறப்பின் முன்நின்று சிலுவை நோக்கி

            தேசத்தை திருப்புவோம் சுதந்தரிப்போமே

            கிரையமின்றி பாவ மீட்பை இந்தியர்கள் பெற்றிட

            கிரையம் செலுத்தும் வீரராக எழும்புவோம் நாமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...