14 January 2026

வைகறையில் உமக்காக

வைகறையில் உமக்காக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வைகறையில் உமக்காக

          வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா

            காலை நேரம் உமக்காக

            வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன் இறைவா

 

                        என் ஜெபம் கேட்டு பதில் தாரும்

                        பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்

1.         உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்

            பயபக்தியோடு பணிந்து கொண்டேன்

            நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்

            குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் - வைகறையில்

 

2.         ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா

            உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே

            நீர்தானே எனது உரிமைச் சொத்து

            எனக்குரிய பங்கும் நீர்தானய்யா - வைகறையில்

 

3.         படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்

            அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்

            என் இதயம் பூரித்து துள்ளுகின்றது

            என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

 

4.         காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்

            நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்

            எப்போதும் என்முன்னே நீர்தானய்யா

            ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...