வான்புறாவே வான்புறாவே எங்கள் மீதே
வந்திறங்கும் - (2)
உந்தன்
வல்லமையுள்ள சிறகாலே
வந்திருக்கும் என்னை தொடுமைய்யா - 2
நீர் தொட்டால்தான்
என் வாழ்வில் சந்தோசம் ஐயா - (2) - வான்புறாவே
1. உலர்ந்த எழும்புள்ள
பள்ளத்தாக்கைப் போல
உம்மண்டை நான் நிற்கின்றேன்
- 2
உன்னத ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே -
(2)
வல்லமை வரங்களோடு
வந்திறங்குமய்யா - வான்புறாவே
2. தளர்ந்த முழங்கால்கள் பெலனாக மாறும்
தந்தையே உம் ஆவியால் - 2
விண்ணக ஆவியே விடுவிக்கும் ஆவியே - (2)
அக்கினி வரங்களோடு
வந்திறங்குமய்யா - வான்புறாவே
3. நான் கூட ஒரு நாளில் மறுரூபமாவேன்
நீர் தந்த அபிஷேகத்தால் - 2
சாத்தானை ஜெயித்து நான் உலகத்தை மறந்து
நான் - (2)
மேகத்தில் பறந்திடும் நாள் நெருங்குதைய்யா - வான்புறாவே
- Eva. E. Williams
No comments:
Post a Comment