88. சங்கராபரணம் ஆதிதாளம்
பல்லவி
ஜகநாதா,
குரு பரநாதா, திரு
அருள்
நாதா, ஏசு பிரசாதா நாதா!
அனுபல்லவி
திகழுறுந்[1]
தாதா[2],
புகழுறும் பாதா,
தீதறும் வேத
போதா!
சரணங்கள்
1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய்[3]
கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம்
பரிந்து,
நர[4]தேவனாக
வந்தாய் மொழியாலோ? - ஜக
2. எளிய
வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
உடு[5]
வழி காட்டிடப் புரிந்தாயே. -
ஜக
3. அருந் தவன்[6]
கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில்
துதிக்க களித்தாயே,
வரும்
தவ மதியால் முன் மற[7]
மன்னன் தேடிட, உன்
மலர்
முகங் காட்டாமல் ஒளித்தாயே. -
ஜக
4. மக்கள்
உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக்[8]
கடர் துன் மனத்தைத் திருத்தி,
அறத்தின் வித்தை
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே. - ஜக
5. இஷ்டமுடன் நேசித்தும் எமக்குப தேசித்தும்
இணையில்
பேரின்பக் கண்ணால் பார்த்தாயே;
துஷ்டப் பேயைக் கடிந்தும் துஞ்சினர்க்[9]
குயிர்தந்தும்
துன்பப்பிணி பலவுந் தீர்த்தாயே - ஜக
- வீரமா முனிவர்
No comments:
Post a Comment