20 January 2026

ஜெகநாதா குரு பரநாதா திரு-2

ஜெகநாதா குரு பரநாதா திரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

147.           இராகம்: தன்யாசி.                                                                                                                        தாளம்: ஆதி.

 

                             பல்லவி

 

                        செகநாதா, குரு பரநாதா, திரு

                        அருள் நாதா, இயேசு பிரசாதா நாதா!

 

                             அனுபல்லவி

 

            திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,

            தீதறும் வேத போதா! - செகநாதா,

 

                             சரணங்கள்

 

1.         முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர

            மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?

            நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,

            நரதேவனாக வந்தாய் மொழியாலோ? - செகநாதா

 

2.         எளிய வேடந் தரித்தே இங்கவ திரித்தாலும்,

            இமையோர் வந் திறைஞ்சிடத் தெரிந்தாயே;

            ஒளிசெய்யும் மணிமுடி உயர்மன்னர் தொழும்படி

            உடு வழி காட்டிடப் புரிந்தாயே - செகநாதா

 

3.         அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,

            ஆலயத்தில் துதிக்க களித்தாயே,

            வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்

            மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே - செகநாதா

 

4.         மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,

            மதுரப் பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;

            சிக்கடர் துன்மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தைத்

            திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே. - செகநாதா

 

5.         இட்டமுடன் நேசித்தும் எமக்குபதேசித்தும்

            இணையில் பேரின்பக் கண்ணால் பார்த்தாயே;

            துட்டப் பேயைக் கடிந்தும் துஞ்சினர்க் குயிர் தந்தும்

            துன்பப் பிணி பலவுந் தீர்த்தாயே. - செகநாதா

 

6.         நிகராய் இப் பெரு நன்றி நீ இயற்றின தன்றி

            நீதிக்கும் பலியாகப் பரிந்தாயே;

            புகர்கொள் எமை நினைந்து பூங்காவில் மிக நொந்து

            பொருவில் உதிர வேர்வை சொரிந்தாயே. - செகநாதா

 

7.         தனையர்வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட

            தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;

            வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு

            மேவி அனுபவிக்க நேர்ந்தாயே - செகநாதா

 

8.         சயிலம் பிளந்திடவும் தபனன் வில் மங்கிடவும்

            சாமி எமைப் புரக்க மரித்தாயே;

            உயிரோடு செஞ்டர்போல் உயிர்த்துத், திருவுடல்மேல்

            உற்ற ஐந்து காயங்கள் தரித்தாயே. - செகநாதா

 

9.         மாதவர் எங்கும் செல்ல மறை உபதேசஞ் சொல்ல

            வரங்கள் அளவில்லாது பொழிந்தாயே;

            ஓத ஒண்ணாத துங்க உன்னதமான அங்கம்

            உலகில் அமைத்து முத்திக் கெழுந்தாயே. - செகநாதா

 

10.       அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,

            ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே

            எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,

            எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே - செகநாதா

 

 

- வீரமாமுனிவர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...