20 January 2026

ஜெகநாதா குரு பரநாதா திரு-3

ஜெகநாதா குரு பரநாதா திரு-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

89. இராகம்: தன்யாசி                                      ஆதிதாளம் (404)

 

                             பல்லவி

 

                   ஜகநாதா, குரு பரநாதா, திரு

                        அருள் நாதா, ஏசு பிரசாதா நாதா!

 

                             அனுபல்லவி

 

            திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,

            தீதறும் வேத போதா!

 

                             சரணங்கள்

 

1.         நிகராய் இப் பெரு நன்றி நீ இயற்றின தன்றி

            நீதிக்கும் பலியாகப் பரிந்தாயே;

            புகர்கொள்[1] எமை நினைந்து பூங்காவில் மிக நொந்து;

            பொருவில் உதிர வேர்வை சொரிந்தாயே. - ஜக

 

2.         தனையர்[2]வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட்கொண்ட

            தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;

            வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு

            மேவி அனுபவிக்க நேர்ந்தாயே - ஜக

 

3.         சயிலம்[3] பிளந்திடவும் தபனன்[4] வில் மங்கிடவும்,

            ஸ்வாமி எமைப் புரக்க[5] மரித்தாயே,

            உயிரோடு செஞ்டர்போல் உயிர்த்து, திருவுடல்மேல்

            உற்ற ஐந்து காயங்கள் தரித்தாயே. - ஜக

 

4.         மாதவர் எங்கும் செல்ல, மறை உபதேசஞ் சொல்ல,

            வரங்கள் அளவில்லாது பொழிந்தாயே;

            ஓத ஒண்ணாத துங்க உன்னதமான அங்கம்

            உலகில் அமைத்து முத்திக் கெழுந்தாயே. - ஜக

 

5.         அமரர்[6] முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,

            ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே,

            எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,

            எமைப் புரந்தாளும்[7], மானப் பர்த்தாவே - ஜக

 

 

- வீரமா முனிவர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பாவம்

[2] மகன்

[3] மலை

[4] சூரியன்

[5] காக்க

[6] வானோர்

[7] காத்து

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...