19 January 2026

ஜீவனுள்ள ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம்

ஜீவனுள்ள ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜீவனுள்ள ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம்

          ஜீவன் தந்து மீட்டெடுத்த ரட்சகர்க்கு ஸ்தோத்திரம் - 2

 

                        ஜீவனுள்ள நாளெல்லாமே

                        பாடிடுவேன் ஸ்தோத்திரம்

 

                        தேவா ஸ்தோத்திரம்

                        இயேசு தேவா ஸ்தோத்திரம் - 2

 

1.         தண்ணீரை கடக்கும் போது

            வருவேன் என்றீரே ஸ்தோத்திரம்

            கண்ணீரின் பாதையிலும்

            கைவிடேன் என்றீர் ஸ்தோத்திரம்

 

            கடல் மீது நடந்தாலென்ன

            கரம் தூக்கி விடுவீர் ஸ்தோத்திரம்

            அலை மோதி அசைந்தாலென்ன

            கப்பலிலே இருப்பீர் ஸ்தோத்திரம்

 

                        எபினேசர் ஆனீர் ஸ்தோத்திரம்

                        இம்மானுவேலே ஸ்தோத்திரம் - 2 - ஜீவனுள்ள

 

2.         மான்களின் கால்கள் போல

            என் கால்களை மாற்றினீர் ஸ்தோத்திரம்

            மதிலையும் தாண்டிச் செல்லும்

            பலத்தையும் கொடுத்தீர் ஸ்தோத்திரம்

 

            செங்கடல் வந்தாலென்ன

            கடந்திடச் செய்தீர் ஸ்தோத்திரம்

            எரிகோ மதிலாலென்ன

            விழுந்திடச் செய்தீர் ஸ்தோத்திரம்

 

                        எபினேசர் ஆனீர் ஸ்தோத்திரம்

                        இம்மானுவேலே ஸ்தோத்திரம் - 2 - ஜீவனுள்ள

 

3.         அக்கினி சூளையிலும்

            உலாவியே காப்பீர் ஸ்தோத்திரம்

            சிங்கத்தின் வாயினின்று

            விலக்கியே மீட்டீர் ஸ்தோத்திரம்

 

            வழிகளில் என்னை காக்க

            தூதனை அனுப்புவீர் ஸ்தோத்திரம்

            வெள்ளம் போல சத்துரு வந்தால்

            கொடியேற்றி காப்பீர் ஸ்தோத்திரம்

 

                        எபினேசர் ஆனீர் ஸ்தோத்திரம்

                        இம்மானுவேலே ஸ்தோத்திரம் - 2 - ஜீவனுள்ள

 

 

- John - Vasanthi

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...