19 January 2026

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

            வற்றாத நதியாக வாரும் போதகரே - 2

                        வாரும் ஐயா போதகரே - (2)

                        வற்றாத ஜீவ நதியாக - (2)

 

1.         கணுக்கால் அளவு போதாதையா

            முழங்கால் அளவும் போதாதையா

                        நீந்தி நீந்தி மூழ்கணுமே - (2)

                        மிதந்து மிதந்து மகிழணுமே - (2)

 

2.         போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே

            பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே - 2

                        சேருமிடமெல்லாம் ஆறுதலே - (2)

                        செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே - (2)

 

3.         கோடி கோடி மீனவர் கூட்டம்

            ஓடி ஓடி வலை வீசணும் - 2

                        பாடி பாடி மீன் பிடிக்கணும் - (2)

                        பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் - (2)

 

4.         கரையோர மரங்கள் ஏராளமாய்

            கனி தர வேண்டும் தாராளமாய் - 2

                        இலைகள் எல்லாம் மருந்தாகணும் - (2)

                        கனிகள் எல்லாம் உணவாகணும் - (2)

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...