05 April 2024

சுகம் தரவேண்டும் யேகோவாராப்பா

சுகம் தரவேண்டும் யேகோவாராப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சுகம் தரவேண்டும் யேகோவாராப்பா - இன்று

                        இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்

                        தூய ஆவி வல்லமையால் - 2

 

1.         நிமிர முடியாத மகளைஅன்று

            நிமிர்ந்து துதிக்க செய்தீர்

            நிரந்தரமாய் குணமாக்கி

            உமக்காய் வாழ செய்தீர்

 

2.         தொழு நோய்கள் சுகமானதே

            உம் திருக்கரம் தொட்டதால்

            கடும் வியாதிகள் விலகியதே

            உமது வல்லமையால்

 

3.         பிறவியிலே முடவர் அன்று

            உம் நாமத்தில் நடந்தாரே

            பெரும்பாடுள்ள பெண் அன்று

            சாட்சி பகர்ந்தாளே

 

4.         லேகியோனை தேடிச் சென்று

            உம் பாதம் அமரச் செய்தீர்

            தெக்கபோலி நாடெங்கும்

            உம் நாமம் பரவ செய்தீர்

 

5.         பேதுரு மாமி குணமாக்கினீர்

            பணிவிடை செய்ய வைத்தீர்

            பேய் பிடித்த அநேகரை

            அதட்டி விடுவித்தீர்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...