05 April 2024

சீயோன் சிகரத்தின் நாதம்

சீயோன் சிகரத்தின் நாதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          சீயோன் சிகரத்தின் நாதம்

            சிறந்த மகிமையின் கீதம்

                        இயேசுவின் சஷகம் இன்னிசை கானம்

                        என்ன பேரானந்தமானந்தம்

 

1.         சுரமண்டலக்காரர்கள் ஒன்றாய் கூடி

            சுரமண்டலங்கள் இசைக்கும் ஓசை போல்

            பெரு வெள்ளத்தின் இரைச்சலைப் போல்

            பலத்த இடி முழக்கங்கள் போல்

            எவரும் அறியா புது பாட்டின் தொனி

            பரலோகெங்கும் ஒலிக்கின்றதே

 

2.         இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்

            இணைந்தே நிற்கின்றார்

            ஆட்டுக்குட்டியுடன் தேவ நாமம்

            நெற்றியில் தரித்தே

            தூய ஜீவிய ஜொலிப்புடனே

            ஆளுகை செய்யும் ஆசாரியர்

            இராஜாக்களாய்

            முழங்குகின்றார் ஜெய கீதங்கள் - சீயோன்

 

3.         வாயினில் கபடம் வஞ்சனை இல்லையே

            ஆடையில் கறைகள் ஏதுமே இல்லையே

            ஆவியின் முதற் பலன்கள் பெற்றோர்

            புவி தன்னில் சிலுவை சுமந்தோர்

            கற்புடன் அவரை பின்பற்றி செவித்தோர்

            கர்த்தரின் முகங் கண்டார்ப்பரித்தார் - சீயோன்

 

4.         சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் மாறினோரே

            தாழ்மையாய் அவரின் சித்தம் செய்தவரே

            அன்பில் பூரணம் அடைந்தவரே

            கன்னிகை சீயோனாகத் திகழ்ந்தார்

            சந்ததம் மகிழ்ந்தே சஞ்சலம் நீக்கியே

            ஆனந்தம் பொங்க ஆடிப்பாடினார் - சீயோன்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...