இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
1. வேர்வை
இரத்தமாய் மாறிடவே
நீர் வியாகுலத்தால்
வேதனையில் போரிடவே
தாங்காத்
துயரமதில் நீர்
தனிமையிலே
தவிக்கின்ற
போது சீசர்கள்
உறங்கையிலே
என்ன நினைத்தீரோ
என் இயேசு நாதா
(2)
உம்மை
நான் நினைக்கையில்
உருகுகின்றேன்
ஐயா
2. பற்பல அதிசயங்களை
பார்த்தறிந்தவனும்
பணப்பையை
தன் தோளில் சுமந்தே
திறிந்தவனும்
முப்பது
வெள்ளிக்காக மோகம்
கொண்டு மோசம் செய்ய
முத்தமிட்டு
உம்மை காட்டிக்
கொடுக்கும் வேளையிலே
என்ன நினைத்தீரோ
என் இயேசு நாதா
(2)
உம்மை
நான் நினைக்கையில்
உருகுகின்றேன்
ஐயா
3. உமக்காக
ஜீவனையே தருவேன்
என்றவனும்
உம் நிமித்தம்
எதுவரினும் இடறல்
அடையேன் என்றவனும்
உயிருக்காக
பயம் நிறைந்து
உமை அறியேன் என்று
உமக்கு
எதிரே சத்தியம்
செய்திடும் வேளையிலே
என்ன நினைத்தீரோ
என் இயேசு நாதா
(2)
உம்மை
நான் நினைக்கையில்
உருகுகின்றேன்
ஐயா
4. பாரச்சிலுவையது
தோளில் அழுந்திடவே
பாதம் இடறியே
நீர் பரிதவித்து
சென்றிடவே
வாரினால்
அடிக்கும் போது
வலியினால் துடித்திடவே
யாரிடமும்
சொல்லாமல் நீர்
ஏங்கி தவித்திடும்
வேளையிலே
என்ன நினைத்தீரோ
என் இயேசு நாதா
(2)
உம்மை
நான் நினைக்கையில்
உருகுகின்றேன்
ஐயா
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment