என்னச் சொல்லி நன்றி சொல்வேன்
எதைச் சொல்லி நன்றி சொல்வேன் - 2
ஒன்றல்ல இரண்டல்ல தேவனின் நன்மைகள்
எத்தனை எத்தனை கணக்கில் இல்லை - 2
நன்றி சொல்ல நாவுகள் இல்லை
பதில் செய்திடவும் திராணியும்
இல்லை - 2
1. உலகம் தோன்றும் முன்னே முன்குறித்தீர் அதை
சொல்லவா
தாயின் வயிற்றில் பாதுகாத்தீர் அதைச் சொல்லவா
- 2
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
ஆதரித்தீரே அதைச் சொல்லவா - 2 - நன்றி
சொல்ல
2. துக்கத்தில் அழியாமல் துணை நின்றீர் அதை சொல்லவா
துன்பத்தில் சோர்ந்திடாமல் கூட நின்றீர்
அதை சொல்லவா - 2
வியாதி நேரத்தில் சுகம் தந்து
வாழ வைத்தீர் அதைச் சொல்லவா - 2 - நன்றி
சொல்ல
3. தனிமை நேரத்தில் துணையானீர் அதை சொல்லவா
ஜெபத்தின் நேரத்தில் பதிலானீர் அதை சொல்லவா
- 2
கைவிட்ட நேரத்தில் இம்மட்டும் எனக்கு
கைக்கொடுத்தீரே அதைச் சொல்லவா - 2 - நன்றி
சொல்ல
- V. Sam David Raj
https://www.youtube.com/watch?v=ZDZVFtLtbak
No comments:
Post a Comment