13 September 2024

நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்

நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்

            யோனாவிலும் சாலமோனிலும் நீரே பெரியவர்

            நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்

            சர்வத்திலும் சகலத்திலும் நீரே பெரியவர்

 

                        மனுஷரைப் பார்க்கிலும் நீரே பெரியவர்

                        பிரபுக்களைப் பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர் - 2

                        நான் நினைப்பதிலும் ஜெபிப்பதிலும் அதிகமாய் செய்பவர்

 

1.         கஷ்டத்தின் நேரங்களில் நீரே என் துணை

            கண்ணீரின் பாதைகளில் நீர் ஒருவரே என் பதில் - 2

            என் சூழ்நிலையைப் பார்க்கிலும் நீரே பெரியவர்

            என் தேவையை பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர் - 2

            என் உயர்வினிலும் தாழ்வினிலும் நீரே பெரியவர்

 

2.         சீறிடும் புயல்களை நீரே அதட்டுவீர்

            கொந்தளிக்கும் கடல்களை நீர் ஒருவரே அடக்குவீர் - 2

            யுத்தங்கள் செய்வதில் நீரே வல்லவர்

            அற்புதம் செய்வதில் நீர் ஒருவரே சிறந்தவர் - 2

            என் மரணத்திலும் ஜீவனிலும் நீரே பெரியவர்

 

 

- Philip Jeyaraj

 

 

https://www.youtube.com/watch?v=yXOte99_Gog

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...