நீதியில் நிலைத்திருந்து உம்

நீதியில் நிலைத்திருந்து உம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீதியில் நிலைத்திருந்து

                        உம் திருமுகம் நான் காண்பேன்

                        உயிர்த்தெழும்போது

                        உம் சாயலால் திருப்தியாவேன் - 2

1.         தேவனே, நீர் என் தேவன்

            அதிகாலமே தேடி வந்தேன் - 2

            நீரின்றி வறண்ட நிலம்போல்

            ஏங்குகிறேன் தினம் உமக்காய் - 2

                        அல்லேலூயா ஓசன்னா - 4

2.         ஜீவனை விட உம் அன்பு

            அது எத்தனை நல்லது - 2

            புகழ்ந்திடுமே, என் உதடு

            மகிழ்ந்திடுமே, என் உள்ளம் - 2

                        அல்லேலூயா ஓசன்னா - 4

3.         உயிர்வாழும் நாட்களெல்லாம்

            உம் நாமம் சொல்லித் துதிப்பேன் - 2

            அறுசுவை உண்பது போல

            திருப்தியாகும் என் ஆன்மா - 2

                        அல்லேலூயா ஓசன்னா - 4

4.         படுக்கையில் உம்மை நினைப்பேன்

            இரா சாமத்தில் தியானம் செய்வேன் - 2

            துணையாளரே, உம் நிழலை

            தொடர்ந்து, நடந்து வளர்வேன் - 2

                        அல்லேலூயா ஓசன்னா - 4

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு