19 September 2024

நீ உலகில் தனிமரம் உன் சோகம்

நீ உலகில் தனிமரம் உன் சோகம் நிரந்தரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   நீ உலகில் தனிமரம் உன் சோகம் நிரந்தரம்

                        ஏற்ற துணை என்று நீ இயேசுவை பின்பற்று

 

1.         செல்வம் சேர்கையில்

            உன்னை சுற்றம் சூழுவார் - 2

            துன்பம் சூழ்கையில் உன்னை குற்றம் காணுவார்

            குற்றம் காணுவார்

            தனியாய் பிறந்தோம் தனியாய் மரிப்போம்

            துணைகள் ஏணடா

                        பயனே வாழ்வில் குறியாய் கொண்ட

                        துணைகள் வீணடா - 2 - நீ உலகில்

 

2.         வாழும் நாளிலே உன்னை

            வாழ்த்துவோர் கோடியே - 2

            வருந்தும் நாளிலே அவர் பிரிவார் ஓடியே

            பிரிவார் ஓடியே

            உலகில் காணும் துணைகள்

            எல்லாம் மரணம் வரையிலே

                        மரணம் தழுவும் நேரம்

                        உடன் வருவோர் யாரிங்கே - 2 - நீ உலகில்

 

3.         இருளில் நடக்கையில்

            உன் நிழலும் மறைந்திடும் - 2

            உருவம் தளர்கையில் உன் உறவுகள் பறந்திடும்

            உறவுகள் பறந்திடும்

            பணத்தை அழகை விரும்பும்

            மனித உறவை வெறுத்திடு

                        உறவாய் உயிராய் பிரியா துணை வரும்

                        இயேசுவில் நிலைத்திடு - 2 - நீ உலகில்

 

 

Bro . Vincent Selvakumar

 

 

https://www.youtube.com/watch?v=BE3lgXunTgA

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...