25 September 2024

தேவன் வல்லமையை புரிந்திருந்தாலே

தேவன் வல்லமையை புரிந்திருந்தாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தேவன் வல்லமையை புரிந்திருந்தாலே

            துன்பங்கள் மறைந்து போகும் தன்னாலே - 2

            உண்மையாய் நம்பினால்

            அவர் உன்னை அன்பினால்

            துன்பத்தை இன்பமாக மாற்றிடுவார்

                        நம் தேவன் பாவம் போக்க

                        மண்ணில் வந்தாரே

                        தேவன் ஆயினும் சிலுவை சுமந்தாரே

            அவர் உந்தன் பக்கம் வந்து

            உன் ஜெபத்தை கேட்டறிந்து

            அவர் உனக்கு பதில் தந்து

            உன்னை காப்பாரே - எப்போதும் - தேவன்

 

 

1.         எந்நாளும் ஜெபிக்க வேண்டும்

            அவரோடு பேச வேண்டும்

            பிள்ளை போல

            வசனங்கள் படிக்க வேண்டும்

            தினம் அவரை துதிக்க வேண்டும்

            முதன்மையாக

                        இதன்படி நீ நடந்தால்

                        உன்னையே கொடுத்தால்

                        நிச்சயம் அவர் துணைக்குண்டு

                        எப்போதும் - தேவன்

 

2.         கேளுங்கள் கொடுக்கப்படும்

            தட்டுங்கள் திறக்கப்படும்

            நம்பி கேட்டால்

            வானாதி வானங்களும்

            பூலோக மேன்மைகளும்

            அவருகென்றே

                        இதன்படி நீ நடந்தால்

                        உன்னையே கொடுத்தால்

                        நிச்சயம் அவர் துணைக்குண்டு

                        எப்போதும் - தேவன்

 

 

- Benny Pradeep

 

 

Youtube

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...