கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர்
கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன்
கர்த்தர்
என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு
அஞ்சிடுவேன்
-
நான் யாருக்கு அஞ்சிடுவேன்
1. என் முகத்தை தேடும் என்றீர்
இன்னமும் நான் அன்பு கூர்ந்து
நோக்குவேன்
உம் பொன் முகமே - 2
சிலுவை நோக்கி பார்த்த கண்கள்
சூழ்நிலைகள் மாறினாலும்
வெட்கமடைந்து போவதில்லையே - 2 - கர்த்தர்
என்
2. தகப்பனும் தாயும் என்னைக்
கைவிடும் வேளைவரினும்
அரவணைக்கும் உந்தன் கரமே - 2
கழுகு தன் குஞ்சுகளைப்
பறந்து காப்பது போல்
காத்த உந்தன் செட்டை தஞ்சமே - 2 - கர்த்தர்
என்
3. எந்தனுக்கு விரோதமான
எரிகோவின் மதில்களைத்
தகர்த்து சாம்பலாக்கிடுவீர் - 2
எதிரிகளின் சேனைகள்
என்றும் என்னைத் தொடராமல்
பின் தொடர்ந்து வந்திடுவீர் - 2 - கர்த்தர்
என்
4. காலமோ கடைசியாகி
பாவம் பாரில் படர்ந்து பெருகி
உலக வேஷம் கடந்து
செல்லுதே - 2
வருகை தாமதிக்கையில்
புறாவைப் போல் சிறகிருந்தால்
பறந்து வந்து உம்மைக் காணுவேன் - 2 - கர்த்தர்
என்
Comments
Post a Comment