நித்தியா இவ் ஆலயத்தில் சேர் ஐயா
316.
இராகம்: பைரவி திரிபுடைதாளம் (474)
பல்லவி
நித்தியா, இவ்
ஆலயத்தில் சேர், ஐயா;-இதில்
நேசமாய் வந்தோர்க் கருள் கூர், ஐயா,
அனுபல்லவி
பெத்த லேம் பதிக்
கிறைவா, பேச அரிதான திரு
சத்ய மறை பரவும்[1] சுவாமி
ஏசு ராஜன் எனும் - நித்
சரணங்கள்
1. சத்திய
பரமண்டல வாசனே-பரி
சுத்தர்
செய்யும் தோத்திரத்தில் நேசனே
பத்தர்கள் இயற்று பவ நாசனே,-இந்தப்
பார்
இருள் அகற்றும், பிரகாசனே
சத்துரு
தசை, உலகம் மெத்தவும் வருத்த
நொந்து
கத்தும்
அடியார்க்கு உன்தன் சித்தம் திரங்க என்றும்
பத்து
நெறியும் கடந்து பித்தராய் பிழைத்த
எங்கள்
பாவமும்
அதால் விளைந்த சாபமும் தொலைக்க வந்த - நித்
2. மதி
இல்லாத எங்களைப் பாராட்டியே, பொல்லா
மானிடர்
பிழைக்க அருள் காட்டியே,
சதிசெய் அலகை வஞ்சம் ஓட்டியே,-உன்தன்
சபைக்குக்
கிருபை முடி சூட்டியே
கதியும் அற இழந்த கடையானோர் உன் பதத்தின்
ததி இதுவாக வந்து தங்குதலால் ஆதரிப்பாய்!
மதியும்[2] பதத்தினில் இரவியும்[3] தாரகைக்[4] கணம்
துதி
செய் சிரத்தணிந்த துய்ய சபை போற்றும்
தேவவே - நித்
3. தந்தை
சுதன் ஆவியர்க்குத் தோத்திரம்-ஆ
னந்த சதா காலங்களும் பாத்திரம்;
விந்தை
மறையே நமது நேத்திரம்[5],-வி
ளங்கும் ஒளியாக வந்த சூத்திரம்;
சொந்தமாய்
இந்நாட்டிலுள்ள சுத்த சுவிசேஷ
சபை
சொன் மறையின் ஊழியர் எச்சோதனை தனக்கும் தப்பி
தந்த
மறை சத்தியத்தில் தாபரிக்க ஆதரிப்பாய்;
சந்ததம் துதி உமக்கே, ஸ்வாமி! ஏசு ராஜன் எனும் - நித்
- காபிரியேல் உபதேசியார்
Comments
Post a Comment