24 September 2024

நீர் என்னைக் காண்கிற தேவன்

நீர் என்னைக் காண்கிற தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீர் என்னைக் காண்கிற தேவன்

                        என் கண்களைத் திறந்தருளும்

                        வேதத்தின் அதிசயம் காணவே

                        என் கண்களை திறந்தருளும் - 2

 

1.         ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ

            ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ

            திரு உதிரத்தை நம்பி வந்தாயானால்

            இரட்சிப்பின் சால்வையைப் பெற்றிடுவாய்

 

2.         ஆகாரே ஆகாரே அழ வேண்டாம்

            ஆண்டவர் உன் குரல் கேட்கிறாரே

            தாகமாய் அவரண்டை செல்வாயானால்

            கானக நீரூற்றுக் கண்டிடுவாய்

 

3.         என் மீட்பர் இன்றும் ஜீவிக்கிறார்

            இப்புவி மீதினில் நின்றிடுவார்

            என் மாமிசம் அழுகிப் போனபின்னும்

            என் கண்ணால் அவரைக் கண்டிடுவேன்

 

 

- Eva. V. Nataraja Mudaliar

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...