11 September 2024

நித்தம் நித்தம் உம்மை நான்

நித்தம் நித்தம் உம்மை நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நித்தம் நித்தம் உம்மை நான்

                        நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்

                        நீர் செய்த நன்மை எண்ணி

                        ஓயாமல் துதிக்கிறேன் - நன்றி நன்றி

 

                        நன்றி நன்றி நன்றி நன்றி

 

1.         தாயைப் போல தேற்றி என்னை

            அரவணைத்து மகிழ்கிறீர்

            தந்தையைப் போல தோள்களிலே

            அனுதினமும் சுமக்கிறீர்

 

2.         கடந்து வந்த பாதைகளை

            நினைத்து நினைத்து பார்க்கிறேன்

            கண்ணீரோடு நன்றி சொல்லி

            ஓயாமல் துதிக்கிறேன்

 

3.         தாயின் கருவில் தோன்றும் முன்னே

            முன் குறித்த தெய்வமே

            நினைப்பதற்கும் மேலாய் என்னை

            ஆசீர்வதித்த தெய்வமே

 

 

- Pr. K.S. Wilson

 

 

https://www.youtube.com/watch?v=40P8A9CSdH4

https://www.youtube.com/watch?v=P5BhGdw2Hsw

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...