நீங்க அழைத்த அழைப்பும்

நீங்க அழைத்த அழைப்பும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

          நீங்க அழைத்த அழைப்பும் கிருபை வரமும் மாறாதது

            இந்த வானம் பூமி மாறினாலும் அழியாதது - 2

 

                        தேவனே தேவனே

                        அதை மனதில் நினைத்துப் பார்க்கும் போது

                        என் அறிவுக்கு எட்டாது

 

1.         உலகம் தோன்றும் முன்பு என்னை முன் குறித்தது

            நான் உருவான தாய் கருவில் பெயர் சொல்லி அழைத்தது - 2

            கிருபையோடு இரட்சண்யம் தேடி வந்தது - (2)

            மெய் கிறிஸ்துவோடு இணைந்தேன் புது ஜீவன் மலர்ந்தது - (2) - தேவனே

 

2.         பாதை மாறிப் போகும் போது வேதம் தெரியுது

            நான் பாவத்தோடு வாழும் போது பாடம் புகட்டுது - 2

            தேவனே உம் அன்பு மட்டும் சொந்தமானது - (2)

            அதை தேடுகின்ற பொழுதினிலே இன்பம் பிறக்குது - (2) - தேவனே

 

3.         உன்னை அழைத்த தேவன் என்றும் உண்மையுள்ளவர்

            அவர் ஒரு போதும் கைவிடாது பாதுகாப்பவர் - 2

            உரைத்த வாக்கின்படியே அவர் உன்னை நடத்துவார் - (2)

            நீ கரை சேர ஒரு நாள் பரலோகில் நிறுத்துவார் - (2) - தேவனே

 

 

Rev. P. Joshua Jebasingh

 

 

https://www.youtube.com/watch?v=ZRLn1_ql7iE

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு