பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்
பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்
பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்
அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்
பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திடச் செய்தார்
பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும்
வேளை
பரலோக தேவதூதர் இறங்கி வந்திடும்
வேளை - 2
1. திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவது
புது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது
ஓஓஓ
உறவுகள் பல உண்டு
இதுபோல எது உண்டு
மன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல்லுறவு
(மணமகன்-மணமகள்)
நீங்கள் இருவர்
உருவாக்கப் போகும் இந்த உறவு
பரலோக
தேவன் தரும் ஆசீர்வாதத்தால்
வாழ்ந்திடுவீர் - 2 - பரமனின்
2. மண வாழ்வு என்பது
மணம் நிறைந்த நல்ல வாழ்வு
மன்னன் இயேசுவை தலையாக கொண்ட நல்வாழ்வு
ஓஓஓ
அன்பும் புரிதலும் குடும்ப வாழ்வில் இருந்து
விட்டால்
சந்தோசத்திற்கும்
நிம்மதிக்கும் குறைவில்லை
மணமகன்-மணமகள்
நீங்கள் இருவர்
இந்த
கருத்தை புரிந்து கொண்டாலே
உங்கள்
வாழ்க்கை என்றுமே நல்லறமாக இனிக்குமே - 2 - பரமனின்
- SIS. JENI JEBARAJ
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment