நீரின்றி வாழ்வேது இறைவா
நீரின்றி வாழ்வேது இறைவா - உம்
நினைவின்றி
மகிழ்வேது தேவா
உலகத்தில்
நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம்
இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல
கோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும் - இயேசுவே
நீர்
பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம்
ஜீவன் உயிர் வாழுமே - உம்
வார்த்தையில்
உண்டு அற்புதமே - நீரின்றி
2. கல்லுக்குள்
தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும்
ஜீவனைத் தந்தவர் நீர்
உமையன்றி
அணுவேதும் அசையாதய்யா
உம்
துணையின்றி உயிர் வாழ முடியாதய்யா - நீரின்றி
3. எத்தனை
நன்மைகள் செய்தீரய்யா - அதில்
எதற்கென்று
நன்றிசொல்லி துதிப்பேனய்யா
அத்தனையும்
சொல்ல வேண்டுமென்றால்
ஆயிரம்
ஆண்டுகள் போதாதய்யா - நீரின்றி
YouTube Link
Comments
Post a Comment