நித்தி யானந்தனே சித்தம் வைத்திரங்குவாய்
215. இராகம்: ஆனந்தபைரவி சம்பைதாளம் (437)
பல்லவி
நித்தி யானந்தனே, சித்தம் வைத்திரங்குவாய்,
நித்தி யானந்தன.
அனுபல்லவி
சத்திய திரித்துவ
தேவ நித்திய கர்த்தாவே,
முற்றும் இரட்சித்து
நடத்தும், கிறிஸ்தையாவே - நித்
சரணங்கள்
1. உன்னை அன்றித்
தஞ்சம் இல்லையே,-காசலையே
உலகம் அனைத்தும் தொல்லையே;
என்னுயிர்க்
குயிரதான மன்னவா நின் தேவ திருச்
சன்னதிக்கபயம்!
என்தன் முன் எழுந்தனுக் கிரகிப்பாய் - நித்
2. கருணைப்ர வாக நேமியே-நான் காமியே;
கடுக வாரும்,
என் சுவாமியே,
அரணும் ஜெயமும் நீயே; கிரணம் இலங்கும் தூயா,
தருணம் கைவிடாதேயும்,
சரணம், சரணம், ஐயா! - நித்
- வேதநாயகம் சாஸ்திரியார்
Comments
Post a Comment