ஏதோ எனக்கு புரியவில்லை

ஏதோ எனக்கு புரியவில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஏதோ எனக்கு புரியவில்லை

            என் மேல் பாசம் குறையவில்லை

            எத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்

            என்றாலும் உம் பாசம் குறையவில்லை - 2

 

                        ஈடில்லை இணையில்லை

                        இது போல் எவரும் செய்ததில்லை

                        இனி மேல் நான் தனிமையில்லை

                        இயேசுவே உம் பாசம் குறையவில்லை - 2

 

1.         உலகத்தின் அன்பு மேலானதென்றேன்

            நாட்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன் - 2

            உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்

            உறவையும் தந்தீரே அதையும் உண்மையாய் தந்தீரே

            தனிமையும் இல்லை வெறுமையும் இல்லை

            இயேசுவே உம் பாசம் குறையவுமில்லை - ஈடில்லை

 

2.         பகைவர்கள் என் மேலே பலவந்தம் பண்ணினாலும்

            பகை எண்ணம் என்னிலே முதலாக நின்றாலும் - 2

            வேண்டாம் என்றீர் வாழ்வை அழிக்கும் என்றீர்

            வேண்டும் என்றீரே பகைகள் மாற செய்தீரே

            பகைகளும் இல்லை அழியவும் இல்லை

            இயேசுவே உம் பாசம் குறையவுமில்லை - ஈடில்லை

 

 

- Rev. Kn. Rajan

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு