நித்தம் நித்தம் பரிசுத்தர் துத்தியம் செய்யும்
317. இராகம்: பிலகரி ரூபகதாளம் (475)
பல்லவி
நித்தம், நித்தம் பரிசுத்தர் துத்தியம் செய்யும் தேவே,-இவ்வாலயம்
நேயத்துடன் வரும் யாவர்க்கும் உன் அருள் தாவே.
அனுபல்லவி
எத்திசையும் பணி கர்த்தாதி
கர்த்தன் நம்
ஏசுகிறிஸ்துவின்
நாமத்திற்கே துதி!
சத்ய
சுவிசேஷம் எங்கும் பரம்ப
தயை அளித்தாளும்
தயாபரனுக்கென்றும்
சர்வாதிகாரம்-மகிமையும்
தகும் நமஸ்காரம்-பெருகவும்
தத்
தித் திமி தத் தித் திமி
தனுத்த சேம்தரி தாம் தரிகிட தளங்கு தோமென.
- நித்தம்
சரணங்கள்
1. அம்பரம் ஆசனம், பூமியைப் பாதத்தில்
கண்டாய்;-மிக
அஞ்சிப்
பணிந்தோர் இருதயத்தும் குடி கொண்டாய்;
இம்பர்[1]
பணிந்து நாம் ஏற்ற கிருபையைத் தந்தாய்;-எங்கே
இரண்டொரு
மூவர் இசைந்தாலும் வருவோம் என்றாய்
இன்ப முழுக்கதாகும் ஞானஸ்நானம்
எல்லா உலகத்தார்க் கீயும் பிரதானம்;
அன்பர் அடையும் கருணை ராப்போஜனம்
ஆத்துமாவுக்கு
நல் ஆறுதலாம் தினம்;
ஆ! உபகாரம்-பராபரன்-அளித்தார் இந்நேரம்; எங்கட்கெந்த
ஆபத்திலும் சாபத்திலும் அருமையாய் தேவ
கோபத்திலும் யாவற்றிலும் கிருபையாகவே. - நித்தம்
2. எத்தலத்தோர்க்கும்
உன் உத்தம வார்த்தையைக் கூறும் - சுவி
சேஷ
குருமாருக்குக் கிருபை பெலன் தாரும்
சுத்த நற்போதகத்தில் பயிலும் நற்சபையாரும்
- மெய்ச்
சுடர் வழி கண்டு நடக்கக்
கருணைக் கண் பாரும்;
பக்தி, விசுவாசம், நம்பிக்கை
எங்களில்
பாலித்தருளும்
எக்காலும்; நிலைநிற்க
முக்தி பெறும் கடை நாள் வரை
ஆவி
முத்திரையாக
நிதம் புரிந்தாளும்;
மூவர் ஒன்றாய் வந்-திவ்வீட்டில்-மேவும்; அன்பாய் நின்-நல்வார்த்தை
முற்பட்ட மகத்துவத் தயையால் உளங்கொள
முற்பொற்
சிறை நற்பிற் சிறையே வணங்கியே.
- நித்தம்
- காபிரியேல் உபதேசியார்
Comments
Post a Comment