18 September 2024

நிலையில்லாத உலகத்திலே அலை

நிலையில்லாத உலகத்திலே அலை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நிலையில்லாத உலகத்திலே

          அலை அலையாய் துன்பங்கள்

            வாழ்க்கை என்னும் படகில் மோதினும்

            கவலை எனக்கு இல்லையே

            கர்த்தர் எந்தன் படகிலே இருப்பதாலே

            தடைகள் இல்லையே

 

                        அலையை தாண்டுவேன் புயலை தாங்குவேன்

                        மலைகளை தகர்ப்பேன்

                        மரணத்தை ஜெயிப்பேன்

                        இயேசுவாலே எதையும் சாதிப்பேன்

 

1.         வெள்ளம் போலவே சத்துரு கூட்டமாய்

            சுற்றி நின்று என்னை தாக்கினும்

            உள்ளந்தன்னிலே அச்சமில்லையே

            வல்ல இயேசு என்னில் வாழ்வதால்

            உலகம் எதிர்த்த போதிலும்

            கலக்கம் எனக்கு இல்லையே

            நண்பர் பிரிந்த போதிலும்

            வருத்தம் எனக்கு இல்லையே

            கர்த்தர் எந்தன் துணையிருப்பதால்

 

2.         நம்பும் நன்மைகள் தீமையானாலும்

            நான்கு திசையும் துன்பம் சூழ்ந்தாலும்

            கண்ணின் இமைகளில்

            எனக்கு ஈட்டியானாலும்

            கால் தளர்ந்து நான் விழுந்தாலும்

            கரங்கள் கொண்டு ஏந்துவார்

            வாதை துன்பம் போக்குவார்

            வருத்தம் மாற்றி தேற்றுவார்

            கலக்கம் எனக்கு என்றும் இல்லையே

 

 

- Bro. Vincent Selvakumar

 

 

https://www.youtube.com/watch?v=OHKMSc4P1RA

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...