நீங்கத்தாம்பா பார்த்துக் கொள்ளனும்
நீங்கத்தாம்பா பார்த்துக் கொள்ளனும்
என்னால்
ஒன்றும் முடியாதப்பா - 2
என் பாரங்களை
உம் மேலே சுமத்துகிறேன்
ஒரே ஒரு பார்வை வேண்டும் கெஞ்சுகிறேன் - 2
1.
பாவம் சூழ்ந்து கொள்கையில்
பரிசுத்தமாய் வாழ்ந்திட
உதவி செய்யும் எந்தன் இயேசுவே
(வழி நடந்து போகையில்
வழி எதுவோ திகைக்கையில்
முன் செல்லும் நல்ல நேசரே)
தடுமாறும் வேளையில்
தனிமை சூழும் நேரத்தில்
தாங்கிக் கொள்ளும் இன்ப நேசரே
- இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே
2. இழந்து போகும் வேளையில்
நிந்தையான நேரத்தில்
(கதறி அழும் நேரத்தில்
கண்ணீர் விடும் நேரத்தில்)
உம் கரங்களாலேஅணைத்துக்
கொள்ளுமே
காயங்கள் ஆற்றியே
என் உள்ளம் தேற்றியே
கைவிடாமல் தூக்கி செல்லுமே
- இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே
3. மாறிவிடும் உலகினில்
மனிதர்களும் பகைக்கையில்
உம் மார்பினிலே சாய்ந்து கொள்ளுவேன்
பாரங்கள் பெருகுகையில்
மனம் உடைந்து போகையில்
உம் பாதத்தில் விழுந்து கிடப்பேன்
- இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே
https://www.youtube.com/watch?v=eEp5nBOC8yY
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment