30 September 2024

நீர் மாத்திரம் இல்லையென்றால்

நீர் மாத்திரம் இல்லையென்றால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நீர் மாத்திரம் இல்லையென்றால்

                    மண்ணாய் போயிருப்பேன்

                        நீர் மாத்திரம் இல்லையென்றால்

                        பெயரற்றுப் போயிருப்பேன்

            என் மீது கிருபை வைத்ததினால்

            உயிரோடு இருக்க செய்தீரே

            என் மீது கிருபை வைத்ததினால்

            உயரத்தில் ஏற செய்தீரே

 

                        என் தகப்பனே என் இயேசுவே

                        உம்மை தொழுகிறோம் உந்தன் நாமத்தை - 2

                        இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே

                        என்றென்றும் கைவிடாத நேசரே - 2

 

1.         காணாமல் போன ஆட்டினைப் போல

            திசை தெரியாமல் அலைந்தேனே - 2

            முட்களிலும் கற்களிலும் காயப்பட்டு போனேனே

            என்னையும் தேடி வந்தீரைய்யா

            ஜீவனை கொடுத்து மீட்டீரே - என் தகப்பனே

 

2.         உடைந்து சிதைந்த பாத்திரம் போல

            விரும்புவாரற்று கிடந்தேனே - 2

            சிதைந்த என்னையும் தூக்கினீரே

            கன்மலை மேலே உயர்த்தினீரே

            உமது காருண்யம் பெரியவனாய்

            உமது கிருபையால் உயர்த்தினீரே - என் தகப்பனே

 

3.         துடைத்துப் போட்ட கந்தையைப் போல

            குப்பையில் நானும் கிடந்தேனே - 2

            நாற்றமெல்லாம் நீக்கினீரே வாசனையாய் மாற்றினீரே

            ராஜாக்களோடு அமரச் செய்து

            பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே - என் தகப்பனே

 

 

- Pastor Lucas Sekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...