நீதிமான் நான் நீதிமான் நான்

நீதிமான் நான் நீதிமான் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீதிமான் நான் நீதிமான் நான்

                        இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் - இயேசுவின்

 

1.         பனை மரம் போல் நான் செழித்தோங்குவேன்

            கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்

            கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு

            முதிர் வயதிலும் நான் கனி தருவேன் - நீதிமான்

 

2.         காலையிலே உம் கிருபையையும்

            இரவினிலே உம் சத்தியத்தையும்

            பத்து நரம்புகள் இசையோடு

            பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்

 

3.         ஆண்டவனே என் கற்பாறை

            அவரிடம் அநீதியே இல்லை

            என்றே முழக்கம் செய்திடுவேன்

            செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்

 

4.         ராஜாவின் ஆட்சி வருகையிலே

            கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் - இயேசு

            ஆகாய மண்டல விண்மீனாய்

            முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன்

 

5.         எதிரியின் வலிமையை மேற்கொள்ள

            அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்

            புது எண்ணை அபிஷேகம் என் தலைமேல்

            பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்

 

6.         கர்த்தரின் கண்கள் என் மேலே

            என் வேண்டுதல் கேட்கின்றார்

            மன்றாடும் போது செவி சாய்த்து

            மாபெரும் விடுதலை தருகின்றார்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=Fl6QODFLyyY

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு