27 September 2024

உம்மை நான் பாடும் போது

உம்மை நான் பாடும் போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   உம்மை நான் பாடும் போது

                        உம்மை நான் தேடும் போது

                        எனக்குள்ளே வாசம் செய்வரே

                        உம்மை நான் துதிக்கும் போது

                        உம்மை நான் போற்றும் போது

                        என் உள்ளம் என்றும் மகிழ்ந்திடுதே - 2

                        அறியாததும் எட்டாததும்

                        பெரிய காரியம் செய்தார் - 2 - உம்மை நான்

 

1.         கடந்து வந்த பாதைகள் எல்லாம்

            கரம் பிடித்து நடத்தி வந்தீர்

            உம் வழியை எனக்கு காட்டினீரே - 2

            நீர் நடத்தின உம் செயல்கள்

            அதிசயம் அற்புதமானவைகள் - 2

            ஒன்றுக்கும் குறையில்லையே

            புது கிருபைகளாலே நடத்தி வந்தீரே - 2 - உம்மை நான்

 

2.         என்ன ஆத்மா அழியும் என்று

            எப்போதும் நினைத்தவர் மத்தியில்

            என் தலையை உயரச் செய்தவரே - 2

            இயேசுவே உம் கரங்களால்

            உயர்த்தி என்னை பிடிக்கவே - 2

            ஓய்ந்து நானும் போவதில்லையே

            உம் ஓங்கிய புயம் என்னோடு இருப்பதால் - 2 - உம்மை நான்

 

 

- A. Anbukumar

 

 

Youtube

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...