19 September 2024

நீ என் தாசன் நான் மறப்பதில்லை

நீ என் தாசன் நான் மறப்பதில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

                   நீ என் தாசன் நான் மறப்பதில்லை

                        தேவனின் வாக்கிதுவே

                        தாங்குவார் ஏந்துவார் என்னை

                        என்றென்றும் மறவாமல் காத்திடுவார்

 

1.         உன்னோடு என்றென்றும் நான் இருப்பேன்

            கலங்காமல் காத்திடுவேன்-2

            அஞ்சாதே கைவிடேனே-2

            என உரைக்கும் இயேசுவில் சரணடைந்தேன்

 

2.         பெயர் சொல்லி உன்னை நான் அழைத்தேனே

            நான் உன்னை நேசிக்கிறேன்

            வா மகனே வருந்தாதே என்று அழைக்கும்

            இயேசுவை நான் தொடர்ந்தேன்.

 

3.         நெருப்பாற்றை கடக்கும் வேளையிலே

            வேகாமல் காத்திடுவேன்

            ஒளி தரும் நிழல் தருவேன் என்று உரைக்கும்

            இயேசுவின் வழி தொடர்ந்தேன்.

 

4.         ஈன்றவள் பிள்ளையை மறந்தாலும்

            நான் உன்னை மறவேனே

            கண்ணீரை துடைத்திடுவேன்

            என்று உரைக்கும் இயேசுவைநான் பணிந்தேன்.

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...