10 September 2024

நானே மெய் தேவனாம்

நானே மெய் தேவனாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        நானே மெய் தேவனாம்

                        மகிமை அருளிச் செய்வேன்

                        சீயோன் களிப்பாய்

                        எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்

 

1.         தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்

            சுமந்து காத்திடுவேன்

            நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்

            துணையே எந்நாளுமே

 

2.         என்னையன்றியே வேறு எதனையும்

            வணங்கிடவே வேண்டாம்

            எந்தன் ஐக்கியம் உன்னில் பெருகிடும்

            வளர்ந்தே முன் ஏகுவாய்

 

3.         எந்தன் யோசனை என்றும் நிலைத்திடும்

            எனக்கென்றும் செவி கொடுப்பாய்

            உன்னை உயர்த்துவேன் மேன்மைப்படுத்துவேன்

            நிலைப்பாய் என் வார்த்தையில்

 

4.         எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்

            விடுதலை அளித்திடுவேன் மகிமை வெளிப்படும்

            தெரிந்தேன் உன்னை நான்

            களிப்பாய் எந்நாளுமே

 

5.         அன்னை வயிற்றினில் தோன்றும் நாள் முதல்

            தாங்கினேன் உன்னை நானே

            என்னை மறவாமல் நன்றி செய்குவாய்

            துதிப்பாய் எந்நாளுமே

 

 

https://www.youtube.com/watch?v=A4U6fYiXvyA

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...