16 September 2024

உனக்கெதிராய் ஆயுதங்கள் ஆயிரங்கள்

உனக்கெதிராய் ஆயுதங்கள் ஆயிரங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உனக்கெதிராய் ஆயுதங்கள்

            ஆயிரங்கள் எழும்பினாலும் - 2

            வாய்க்காதேப் போகச் செய்வார்

            அக்கினியால் அழியச் செய்வார் - 2

                        அவர் இயேசு இயேசு இயேசு

                        இரட்சகர் இயேசு இயேசு இயேசு

                        நல்லவர் இயேசு இயேசு இயேசு

                        வல்லவர் இயேசு

            அல்லேலூயா அல்லேலூயா பாடி

            நன்றி சொல்லி சொல்லி போற்றி

            கர்த்தரைத் துதித்து துதித்து மகிழ்வேன்

            மகிழ்வேனே

 

1.         பெலனானார் துணையானார்

            அரணானக் கோட்டையானார் - 2

            சகாயர் ஆனாரே

            ஆபத்துக் காலத்திலே - 2 - அவர்

 

2.         தோளினிலே மார்பினிலே

            சாய்ந்திட்டால் ஆறுதலே - 2

            ஜீவனைத் தருகின்றாரே

            பரிசுத்த ஆவியாலே - 2 - அவர்

 

3.         உன்னதராய் உயர்ந்தவராய்

            உலகத்தை ஆள்பவராய் - 2

            மீண்டும் வருவாரே

            நம்மை சேர்த்திடவே

            மீண்டும் வருவாரே

            பரலோகம் சேர்த்திடவே - அவர்

 

 

- J.T. Jerome

 

 

https://www.youtube.com/watch?v=U0V3AWQhqDI

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...