நான் விடமாட்டேன் என் இயேசுவை
441. இராகம்: காபி ரூபக
தாளம்
பல்லவி
நான்
விடமாட்டேன் என் இயேசுவை.
அனுபல்லவி
வான் புவியாவும்
போனாலும்,-அத்தால்
மயங்கியே ஒருக்காலும்
மெய்யாய். - நான்
சரணங்கள்
1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
முக்யநன்மைதரச்
சேர்ந்தார்; தீய
எந்தனுக்காய்த்தம்மை
யீந்தார்; எனக்
கெண்ணருநன்மைகள்
நேர்ந்தார்; மெய்யாய். - நான்
2. லோகமெனை உதைத்தாலும், பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
தாகநோயும் வதைத்தாலும்,
இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். - நான்
- அருள்திரு. ஞா. சாமுவேல்
https://www.youtube.com/watch?v=zFbCXrR1i8Y
https://www.youtube.com/watch?v=yuxKauDCHRs
Comments
Post a Comment