25 September 2024

நிலையில்லாத உலகில் அலை

நிலையில்லாத உலகில் அலை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நிலையில்லாத உலகில்

                        அலை அலையாய் துன்பங்கள்

                        வாழ்க்கை என்னும் படகில் மோதினும்

                        கவலை எனக்கு இல்லையே

                        கர்த்தர் எந்தன் படகிலே இருப்பதாலே

                        தடைகள் இல்லையே

                                    அலையை தாண்டுவேன்

                                    புயலை தாங்குவேன்

                                    மலைகளைத் தகர்ப்பேன்

                                    மரணத்தை ஜெயிப்பேன்

                                    இயேசுவாலே எதையும் சாதிப்பேன் - (2) - நிலையில்லாத

 

1.         வெள்ளம் போலவே சத்ரு கூட்டமாய்

            சுற்றி நின்று என்னை தாக்கினும்

            உள்ளந்தன்னிலே (எனக்கு) அச்சம் இல்லையே

            வல்ல இயேசு என்னில் வாழ்வதால் - 2

            உலகம் எதிர்த்த போதிலும்

            கலக்கம் எனக்கு இல்லையே

            நண்பர் பிரிந்த போதிலும்

            வருத்தம் எனக்கு இல்லையே

            கர்த்தர் எந்தன் துணை இருப்பதால் - (2) - நிலையில்லாத

 

2.         நம்பும் நன்மைகள் தீமையானாலும்

            நான்கு திசையும் துன்பம் சூழ்ந்தாலும்

            கண்ணின் இமைகளே (எனக்கு) ஈட்டியானாலும்

            கால் தளர்ந்து நான் விழுந்தாலும் - 2

            கர்த்தர் என்னைத் தாங்குவார்

            கரங்கள் கொண்டு ஏந்துவார்

            வாதை துன்பம் போக்குவார்

            வருத்தம் மாற்றித் தேற்றுவார்

            கலக்கம் எனக்கு என்றும் இல்லையே

            கலக்கம் எனக்கு ஒன்றும் இல்லையே - நிலையில்லாத

 

 

- Bro. Vincent Selvakumar

 

 

Youtube

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...