18 September 2024

நினைவெல்லாம் நீர் தானய்யா

நினைவெல்லாம் நீர் தானய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   நினைவெல்லாம் நீர் தானய்யா

                        என் இயேசய்யா இயேசய்யா

 

1.         உம் நாமம் சொல்ல சொல்ல

            என் வாழ்வு மலருதைய்யா

            உம் புகழ் பாட பாட

            ஒரு பெலன் வந்ததைய்யா

 

2.         உம்மை நான் நோக்கி பார்த்தேன்

            பிரகாச மடைந்தேனைய்யா

            உம்மிடம் தேடி வந்து

            அடைக்கலம் கண்டேனைய்யா

 

3.         வற்றாத நீரூற்றைப் போல்

            பாய்ந்து என்னில் வந்தீர் ஐயா

            வறண்ட என் வாழ்வை

            செழிக்கச் செய்தீர் ஐயா

 

4.         அணையாத சுடரொளியே

            என் இயேசு நீர் தானைய்யா

            என் வாழ்க்கை கப்பலுக்கு

            கலங்கரை தீபமைய்யா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...