நித்தமும் சிந்தித்து சிந்தித் தேசுவின்

நித்தமும் சிந்தித்து சிந்தித் தேசுவின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

110. இராகம்: முகாரி                               ஏகதாளம் (413)

 

                             பல்லவி

 

          நித்தமும் சிந்தித்து சிந்தித் தேசுவின் நிருமலப் பதம் சேராய்;

          நெஞ்சமே, அவர் தஞ்சம் உய்ய நீ கெஞ்சிக் கெஞ்சியே வாராய்

 

                             சரணங்கள்

 

1.         எத்திசைக்கும் இறைமை செலுத்திய கர்த்தர் உன்பவம் போக்க

            இத்தரையில் ஓர் ஏழையாய் வந்ததைப் பத்தியாய் உன்னில் காக்க, - நித்

 

2.         கெத்துசேமினித்தோட்டத்திலே அவர் பத்தியாய் ஜெபம் தொடங்கி

            ரத்த வேர்வை யோடாத்துமப் பாடு சகித் தகோரத்தால் நடுங்கி - நித்

 

3.         சிலுவையை நைந்த உடலில் சுமத்தி, வலிமையாகவே நடத்தி,

            கொலுகதாவினில் கொண்டுபோன துய்யுலகுக்கே உனைக் கடத்த, - நித்

 

4.         பார மரத்தில் அவர் கை காலெல்லாம் சேரவே அறைந்ததையும்

            கூர் சவளக்[1] குத்தால் விலாவினில் சோரி[2] நீர் பிறந்ததையும் - நித்

 

5.         பகலும் இருள, திரையும் கிழிய, நகமும்[3] நடுங்கிப் பிளக்க,

            அகிலம் அதிர, அவர் மரித்ததைச் சகல பேர்க்கும் நீ விளக்க - நித்

 

­- தே.மு.

 

 

https://www.youtube.com/watch?v=iF2eUcY0uEc

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] ஈட்டி

[2] இரத்தம்

[3] மலை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு